அவுஸ்திரேலிய எல்லைப் படைக்கும் இலங்கை சுங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான அங்கீகாரம் தாமதமாகியுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் குறிக்கோள், இரு நாடுகளின் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் மேம்படுத்துவதும் ஆகும்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன, இதன் மூலம் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை சுமூகமாகப் பேண முடியும் எனத் தெரிவித்திருந்தார்.