இவ்வருடம் கொழும்பு நகரில் 6 வெசாக் வலயங்களும் 125 பதிவு செய்யப்பட்ட டன்சல்களும் வெசாக் பண்டிகைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி மருத்துவர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
125 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 49 சோறு , பிரைடு ரைஸ், மஞ்சள் அரிசி உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், அனைத்து வெசாக் வலயங்களிலும் குடிநீரை வழங்குவதற்காக தேசிய நீர் வழங்கல் சபையுடன் இணைந்து நீர்த்தாங்கிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.