சிறுபோக நெற்செய்கைக்கு பசளை கொள்வனவிற்கான வவுச்சர்களை விநியோகிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த யோசனைக்கு நிதிக்குழுவின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
உர இறக்குமதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விவசாய அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே விவசாய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒதுக்கப்படும் நிதி மூலம் சிறுபோகத்தில் எவ்வித இடையூறுமின்றி அரச மற்றும் தனியார் துறையினரிடமிருந்து விவசாயிகள் பசளையை கொள்வனவு செய்ய முடியும் என விவசாய அமைச்சர் கூறியுள்ளார்.