follow the truth

follow the truth

May, 10, 2025
Homeவணிகம்பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான சர்வதேச தினத்தில் இருதரப்பு OSH குழுவுக்கான தேசிய வழிகாட்டுதல்களை அறிமுகம்...

பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான சர்வதேச தினத்தில் இருதரப்பு OSH குழுவுக்கான தேசிய வழிகாட்டுதல்களை அறிமுகம் செய்யும் இலங்கை

Published on

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இவ்வருடம் ஏப்ரல் 28ஆம் திகதி, பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான சர்வதேச தின அன்று பணியிடங்களில் இருதரப்பு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (OSH) குழுக்களை நிறுவுவதற்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட்டது.

குறிப்பாக நாட்டின் ஆடைத் தொழில் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் தாபனம் (ILO) மற்றும் சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் (IFC) ஆகியவற்றுக்கு இடையே இந்த வழிகாட்டுதல்களின் தொகுப்பின் முதல் கட்ட கூட்டு முயற்சியான Better Work Sri Lanka திட்டத்தால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இலங்கை பணியாளர்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு உறுதி செய்யப்படுகிறது. இந்நிகழ்வில் அரச நிறுவனங்கள், முன்னணி கைத்தொழில்கள், தொழிற்சங்கங்கள், அபிவிருத்தி பங்காளர்கள், இலங்கை வர்த்தக சம்மேளனம் (EFC), கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) மற்றும் சர்வதேச கொள்வனவாளர்கள் என 280 பேர் கலந்து கொண்டனர்.

பணியாளர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் பணிபுரிபவர்களின் நல்வாழ்வு ஆகியவற்றின் கலாச்சாரத்தை உருவாக்குவதில் முதலாளிக்கு உதவுவதற்காக பல்வேறு தரப்புக்கள், நிபுணத்துவம் மற்றும் அனுபவம் கொண்ட நிர்வகிப்பு மற்றும் தொழிற்சங்கம்/பணியாளர் பிரதிநிதிகள் அடங்கிய தளம் ஆகியவை அடங்கிய இருதரப்பு OSH குழுக்கள் பற்றிய தேசிய வழிகாட்டுதல்களின் தொகுப்பு இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருதரப்பு OSH கமிட்டிகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதை வலியுறுத்தி OSH பணிகளில் முன்னணியில் இருக்க அவர்களை ஊக்குவிக்கிறது. மேலும், இந்த முயற்சியானது தொழிலாளர்கள், அவர்களது பிரதிநிதிகள் மற்றும் முதலாளிகளுக்கு இடையே சிறந்த தொடர்பு, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான ஒரு வழியை இது உருவாக்குகிறது.

இந்த புரட்சிகர நடவடிக்கை OSH க்கான குறிப்பிடத்தக்க மற்றும் காலத்திற்கேற்ற ஒன்றாக கருதப்படுகிறது. பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலுக்கான உரிமை ILOவின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக ஜூன் 2022 இல் முன்வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலுக்கான முழுமையான உரிமையை மதிப்பது, ஊக்குவித்தல் மற்றும் உணர்தல் மிகவும் முக்கியமானது. என அவர் குறிப்பிட்டுள்ளார். OSH என்பது அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு அடிப்படை உரிமையாகும், மேலும் அவர்களுக்கு ஒரு நிலையான மற்றும் நெகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

இது குறித்து கருத்து தெரிவித்த ILOவின் இலங்கைக்கான பணிப்பாளர் திருமதி சிம்ரின் சிங், பணியிடங்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து துறைகளிலும் வலுவான OSH நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நாங்கள் OSH க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், இரு தரப்பு குழுக்களை ஒரு எடுத்துக்காட்டு மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் தொடர்புடைய பங்குதாரர்களின் கூட்டுத் திறனின் சான்றாக, இறுதியில் உற்பத்தித் திறனை அதிகரிக்க வழிவகுத்தது. என அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ. விமலவீர மேலும் கூறுகையில், OSH நடவடிக்கைகளை கீழ் மட்டத்திலிருந்து குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பல பரிமாண அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம் நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியமானது. OSH ஒரு தார்மீகப் பொறுப்பு மட்டுமல்ல, சட்டப்பூர்வ உரிமையும் கூட என்று கூறிய அவர், மரபுகளின்படி OSH க்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.

Better Work Sri Lanka வின் தலைவரான கேசவ முரளி கணபதி, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலுக்கான உரிமையை நிலைநிறுத்துவதை உறுதி செய்வதற்காக தொடர்புடைய பங்குதாரர்களுடன் பயனுள்ள கூட்டாண்மைகளை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார். நாடு முழுவதும் இந்த வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்வது இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு ஒரு முக்கியமான படியாகும் மற்றும் OSH ஐ மேம்படுத்துவதற்கான சரியான படியாகும் என தெரிவித்தார்.

WSHA இன் தொழில்சார் சுகாதாரம் மற்றும் சுகாதார வைத்தியரும் செயலாளருமான வைத்தியர் அசெனி விக்கிரமதிலக தலைமையில் OSH மற்றும் OSH இன் அடிப்படை உரிமையின் முக்கியத்துவம் பற்றிய குழு விவாதமும் இந்த நிகழ்வில் இடம்பெற்றது. இந்த நிபுணர் குழுவில் தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் (NIOSH) பணிப்பாளர் நாயகம் வைத்தியர் நிர்மலி சம்பிகா அமரசிங்க, மேலதிக தொழில் ஆணையாளர் நாயகம் (பொறியியல்) இ. அபேசிறிவர்தன, இலங்கை தொழிற்தருணர் சம்மேளனத்தின் (EFC) பணிப்பாளர் நாயகம்/பிரதம நிறைவேற்று அதிகாரி வஜிர அலெபொல மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் (SLNSS) பொதுச் செயலாளர் ஸ்ரீ. லெஸ்லி தேவேந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

COVID-19 உடல்நலம் மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளதால், தொழிற்சங்கங்கள் இப்போது பணியிடத்தில் OSH க்கு முன்னுரிமை அளித்து வருகின்றன, என தேவேந்திர கூறினார். “நம்மைப் போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாட்டில் தொழிற்சங்கங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால் தொற்றுநோய்க்குப் பிந்தைய, பணியிடத்தில் OSH ஒரு முன்னுரிமையாகும்.” என தெரிவித்தார். அதேவேளை, EFC பணிப்பாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான வஜிர அலெபொல, “திறமையான OSH முகாமைத்துவ அமைப்பை உருவாக்குவதற்கு தொழிலாளர்கள், அவர்களது பிரதிநிதிகள் மற்றும் முதலாளிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் தொடர்பு மிகவும் முக்கியமானது. இருதரப்பு குழுக்களை செயல்படுத்துவதன் மூலம், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் வேலை செய்யும் உரிமைகளாக அங்கீகரிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.

மேலும், OSH இன் அடிப்படைக் கொள்கை மற்றும் உரிமை என அறிவிக்கப்பட்டதன் மூலம், நிபுணத்துவம் கொண்ட பேச்சாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் தொழிலாளர் பாதுகாப்பை ஒரு அத்தியாவசியமான விஷயமாக அங்கீகரிப்பதாகக் கூறினர், இது பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No description available.

No description available.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக...

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக...

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...