ஜூலை முதல் வடக்கு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

247

எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையில் வடக்கு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையில் ரயில் சேவையை ஆரம்பிக்க முடியும் என மஹவ – ஓமந்தை ரயில் வீதி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் அசோக முனசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் முதல் வவுனியா வரையான ரயில் மார்க்கத்தின் திருத்தப்பணிகள் தற்சமயம் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தநிலையில், அந்த மார்க்கத்தின் முதலாவது கட்டம் நிறைவடைந்துள்ளதுடன், இரண்டாம் கட்டம் காலநிலையை கருத்தில்கொண்டு இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு தொடரூந்து சேவை கொழும்பு – கோட்டையிலிருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here