ரயில் தடம் புரண்டதன் காரணமாக களனிவெளி பாதையின் ரயில் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்த தெரிவித்துள்ளார்.
இன்று காலை அவிசாவளை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி நாரஹேன்பிட்டி வரை ஒரேயொரு ரயில் மாத்திரமே பயணிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு ரயில் கொட்டாவ அல்லது ஹோமாகம நிலையங்களில் இருந்து அவிசாவளை வரை இயக்கப்படும் என பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கொஸ்கம நோக்கிப் பயணித்த ரயில் பேஸ்லைன் வீதி மற்றும் கோட்டே வீதி ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று மாலை 4 மணியளவில் தடம் புரண்டது.
இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதன் காரணமாக களனிவெளி மார்க்கத்தின் ரயில் சேவைகள் தடைப்பட்டது.