வயிற்றுவலி காரணமாக, பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 21 வயது பெண்ணின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்காக, விசேட வைத்திய குழுவொன்று, நாளை மறுதினம் பேராதனை வைத்தியசாலைக்கு செல்ல உள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதேவேளை குறித்த பெண்ணின் மரணத்திற்கு ஒவ்வாமையே காரணம் எனவும் தடுப்பூசியில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், வைத்தியசாலையில் வழங்கப்பட்ட தடுப்பூசி காரணமாகவே, தமது மகள் உயிரிழந்தாக, குறித்த பெண்ணின் பெற்றோர் நேற்று குற்றம் சுமத்தியிருந்தனர்.