follow the truth

follow the truth

July, 21, 2025
Homeஉள்நாடுகடலில் தீப்பற்றிய படகை தேடும் விசேட நடவடிக்கை ஆரம்பம்

கடலில் தீப்பற்றிய படகை தேடும் விசேட நடவடிக்கை ஆரம்பம்

Published on

வாழைச்சேனையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற படகு ஒன்று நேற்று(16) ஒலுவில் துறைமுகத்துக்கு நேரே ஆழ்கடல் பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது.

தீப்பிடித்து எரிந்த படகை தேடும் விசேட நடவடிக்கையை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.

குறித்த படகில் ஐந்து மீனவர்கள் கடல் தொழிலுக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனையடுத்து அந்த பகுதியில் கடற்படை தேடுதலில் ஈடுபட்ட போதிலும், தீப்பரவல் ஏற்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கிடையே அம்பாறைப் பிராந்திய கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள பல ஆழ்கடல் மற்றும் சிறிய ரக மீன்பிடிப் படகுகளும் தீப்பற்றி எரியும் படகு நிலைகொண்டுள்ள பிரதேசத்தை நோக்கி நகர்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தற்போது மீன்பிடிப் படகில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...

ஜகத் விதானவின் மகன் விளக்கமறியலில்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன், ரசிக விதானவை ஓகஸ்ட் 1...