follow the truth

follow the truth

July, 23, 2025
Homeஉள்நாடுஜம்இய்யதுல் உலமாவின் பத்வா குறித்து அரசமட்ட பேச்சுவார்த்தைக்கு தயார்

ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா குறித்து அரசமட்ட பேச்சுவார்த்தைக்கு தயார்

Published on

எமது நாட்டின் சட்டத்திற்கு முரணாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 1979 ஆம் ஆண்டு வழங்கிய பத்வா தொடர்பான அரசாங்க மட்டப் பேச்சுவார்த்தைக்கு தனது தலைமையிலான காத்தான்குடி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு எப்போதும் தயாராவே இருக்கிறது என மௌலவி ஏ.அப்துர் ரவூப் மிஸ்பாஹி அறிவித்துள்ளார்.

எமது நாட்டின் சட்டத்திற்கு முரணாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா(ACJU) 1979 ம் ஆண்டு வழங்கிய பத்வா தொடர்பான அரசாங்க மட்டப் பேச்சுவார்த்தைக்கு எனது தலைமையிலான அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு எப்போதும் தயாராவே இருக்கிறது.

1979 ம் ஆண்டு ACJU வினால் திட்டமிடப்பட்டு எனது பெயர் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்ட பத்வாவில் என்னையும், என்னால் பேசப்பட்ட இஸ்லாமிய ஸுபிஸக் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட பல்லாயிரக்கணக்கான ஸுபி முஸ்லிம்களையும் முர்தத்கள் (இஸ்லாத்தை விட்டு மதம்மாறியவர்கள்) என்றும் முர்தத்கள் கொலை செய்யப்படவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நானும் என்னால் பேசப்பட்ட இஸ்லாமிய ஸுபிஸக் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட பல்லாயிரக்கணக்கான ஸுபி முஸ்லிம்களும் இஸ்லாமியர்களாகவே வாழ்வதோடு நாங்கள் எவரும் இஸ்லாத்தை விட்டும் ஒருபோதும் மதம்மாறவில்லை என்பதை உறுதியாகத்தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் இஸ்லாமிய ஸூபிஸ உயர்தத்துவங்களையே தொடர்ச்சியாக பேசிவருகின்றேன். நான் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக ஒருபோதும் பேசவில்லை. இந்நிலையில் என்னையும்,என்னால் பேசப்பட்ட இஸ்லாமிய ஸுபிஸக் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட பல்லாயிரக்கணக்கான ஸுபி முஸ்லிம்களையும் பலவந்தமாக மதம் மாற்றுவதற்கு ACJU விற்கு அதிகாரம் அளித்தது யார்? எமது அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு ACJU விற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

ACJU வின் பத்வாவினால் கடந்த 44 ஆண்டுகளாக நான் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே இந்த நாட்டில் வாழ்கின்றேன்.

1979 ம் ஆண்டு எனக்கும் ஸுபி முஸ்லிம்களுக்கும் எதிராக ACJU பத்வா வழங்கியிருக்கும் போது 1984 ம் ஆண்டு எகிப்திலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பெறப்பட்ட பத்வாக்களைப் அடிப்படையாகக் கொண்டே ACJU பத்வா வழங்கியதாக அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி ஜனாதிபதி முன்னிலையில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்தற்கான காரணம் என்ன?

1984 ம் ஆண்டு காலப்பகுதியில் எகிப்திலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பல சூழ்சிகளின் மூலம் ACJU வினர் தங்களுக்கு வசதியாக பத்வாக்களைப் பெற்றுக்கொண்டனர். அந்தக்காலப்பகுதியில் ACJU வினரின் சூழ்சிகளுக்கு ஆதரவாகவும், எமது நாட்டின் சட்டத்திற்கு முரணாகவும் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் செயற்பட்டதன் பின்னணி என்ன? எனவும் வினவுகிறேன்.
நான் பேசிவரும் இஸ்லாமிய ஸூபிஸ உயர்தத்துவங்களை நான் ஒருபோதும் சுயமாக முன்வந்து வாபஸ் பெறவில்லை.

எமது நாட்டில் 2009ம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் நிறைவுபெறுவதற்கு முற்பட்ட காலப்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் எனக்கும் நான் போதித்துவரும் வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று – எல்லாம் அவனே என்ற இஸ்லாமிய ஸூபிஸ உயர்தத்துவங்களை ஏற்றுக்கொண்ட பல்லாயிரம் ஸூபி முஸ்லிம்களுக்கும் ACJU வின் பத்வாவினால் ஏற்படுத்தப்பட்ட கொலை முயற்சிகள், வன்முறைச்சம்பவங்களில் இருந்து என்னையும் ஸூபி முஸ்லிம் சமூகத்தையும் பாதுகாப்பதற்காக வஹ்ததுல் வுஜூத் தத்துவங்களை பிரச்சாரம் செய்யமாட்டேன் என ACJU விடம் தெரிவிப்பதற்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தேன்.

மீண்டும் நான் குறித்த இஸ்லாமிய ஸுபிஸ உயர் தத்துவங்களை பேச ஆரம்பித்தபோது அன்றிலிருந்து இன்று வரை ACJU வினர் பத்வாவை அமுல்படுத்தி வருகின்றனர்.

ACJU வின் பத்வாவை ஏற்றுக் கொண்ட இனம்தெரியாத வஹ்ஹாபிஸ அடிப்படைவாதிகள் என்மீது கொலை முயற்சித்தாக்குதல் மேற்கொண்டதுடன் ஸூபி முஸ்லிம்கள் மீதும் வன்முறைகளை மேற்கொண்டனர். இவ்வாறே இந்த விடயம் தொடர்கிறது.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஸஹ்றான் ஹாஷிமும் அவனது தீவிரவாத குழுவினரும் ACJU வின் பத்வாவை ஆதாரமாக வைத்துக்கொண்டே என்னையும் ஸுபி முஸ்லிம்களையும் முர்தத்கள் என்றும் நாங்கள் கொலை செய்யப்படவேண்டியவர்கள் என்றும் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்தனர். இதனால் 1979 ம் ஆண்டு ACJU வினால் வழங்கப்பட்ட பத்வா இன்று இலங்கை நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

எனவே எமது நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் பத்வா தொடர்பாக பேச்சு நடத்த எனது தலைமையிலான அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு எப்போதும் தயாராகவே இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மௌலவீ அல்ஹாஜ்.A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ, பஹ்ஜீ, ஸூபீ, காதிரீ)
தலைவர்
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ்
நம்பிக்கைப் பொறுப்பு
காத்தான்குடி.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பற்றாக்குறை மற்றும் தாமதங்கள் இன்றி தொடர்ச்சியான மருந்து விநியோகத்தை உறுதி செய்ய ஜனாதிபதி அறிவுறுத்தல்

மருந்து விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர்...

மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை செயற்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

தற்போதைய பொலிஸ்மா அதிபர், தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பிய...

தேசிய குறைந்தபட்ச சம்பளம் (திருத்தச்) சட்டமூலம் நிறைவேற்றம்

வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2005ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது), வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி...