follow the truth

follow the truth

June, 2, 2024
HomeTOP2நேர அட்டவணை மற்றும் இலத்திரனியல் பயணச்சீட்டுகளை அறிமுகப்படுத்த திட்டம்

நேர அட்டவணை மற்றும் இலத்திரனியல் பயணச்சீட்டுகளை அறிமுகப்படுத்த திட்டம்

Published on

2048 ஆம் ஆண்டளவில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகள் இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுப் போக்குவரத்து சேவையில் ஒருங்கிணைந்த நேர அட்டவணைகள் மற்றும் இலத்திரனியல் பயணச்சீட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயணிகள் போக்குவரத்துத் துறையில் உயர் தரத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

பயணிகள், பயணச்சீட்டு கொள்வனவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் E- ticketing முறை முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

7 தேசிய பேருந்து சங்கங்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் மாகாண மட்டத்தில் கூடிய விரைவில் கருத்துக்கள் பெறப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் பேருந்துகளுக்கான போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் GPS தொழில்நுட்பம் மற்றும் E- ticketing சேவை முக்கிய அளவுகோலாகக் கருதப்படும் என்றும், கொட்டாவ பேருந்து நிலையம் மற்றும் மாகும்புர பல்நோக்கு பயணிகள் போக்குவரத்து நிலையத்தை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

களு கங்கையை அண்டிய மக்களின் கவனத்திற்கு

அலகாவ பிரதேசத்தில் களு கங்கையின் நீர் மட்டம் 12.38 மீற்றராக உயர்ந்து பெரும் வெள்ள நிலைமையாக உருவாகியுள்ளதாக நீர்ப்பாசன...

வெள்ளத்தில் மூழ்கிய அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்

அதிவேக நெடுஞ்சாலையின் கடுவெல நுழைவாயிலில் உள்ள பியகம நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. இதன்படி கடவத்தை நோக்கி செல்ல கடுவெல நுழைவாயிலை பயன்படுத்தவோ...

களனிவெளி ரயில் பாதையில் பாலம் இடிந்ததில் ரயில் சேவைகள் மட்டு

வாக மற்றும் கொஸ்கம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் இடிந்து வீழ்ந்துள்ளமையினால் களனிவெளி பாதையின் புகையிரத போக்குவரத்து வாக...