follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP2அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலாப் பிரதேசமாக ‘அருகம்பே’யை அபிவிருத்தி செய்யத் திட்டம்

அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலாப் பிரதேசமாக ‘அருகம்பே’யை அபிவிருத்தி செய்யத் திட்டம்

Published on

அம்பாறை, அருகம்பே சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகளை அடையாளம் கண்டு, முறையான திட்டத்தின் ஊடாக அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, பிரபலமான நீர் சறுக்கு போன்ற விளையாட்டுக்களை அருகம்பே கடற்பிரதேசத்தில், ஊக்குவிப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பு குறித்து சுட்டிக்காட்டினார்.

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் இன்று (25) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்கான இக்கலந்துரையாடலில் அரச அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறையில் பணியாற்றுவோர் கலந்துகொண்டனர்.

2035 ஆம் ஆண்டளவில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% சுற்றுலாத்துறையின் மூலம் ஈட்டப்படும் என சர்வதேச அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும், சுற்றுலாத் துறையின் வருமானத்தின் ஊடாக இலங்கையின் நிதிப் பிரச்சினைகளுக்கு நேரடி தீர்வு பெற முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையை இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும், அடுத்த 10 வருடங்களுக்குள் அதனை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (25) அம்பாறை மாவட்டத்தின் அருகம்பே மற்றும் பீனட்பாம் கடற்கரைகளைப் பார்வையிடும் கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார்.

அந்த சுற்றுலாப் பிரதேசங்களின் குறைபாடுகளை ஆராய்ந்த பின்னர், அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடினார்.

அதன்பின், அப்பகுதியைச் சேர்ந்த வணிகர்களுடன் கலந்துரையாடி, சுற்றுலாத்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார்.

வர்த்தக ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினை குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக புதிய திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்திக்கு இந்தியாவின் ஆதரவு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மகாவலி திட்டத்தின் இடது கரையிலுள்ள காணிகளில் ஒரு பகுதியை உள்ளடக்கி அபிவிருத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தை செயற்படுத்தும்போது, சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் முதலீட்டு வலயமும் உருவாக்கப்பட உள்ளது.

சுற்றுலாத்துறையை முன்னேற்றும் அதேவேளை, விவசாய நவீனமயமாக்கல் திட்டத்துடன் மீன்பிடித்துறை அபிவிருத்திக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்வரும் பத்தாண்டுகளில், இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 25 இலட்சத்தில் இருந்து 50 இலட்சமாகவும், அதன் பிறகு ஒரு கோடியாகவும் அதிகரிக்கப்பட வேண்டும்.

ஒரு சுற்றுலாப் பயணி தினமும் 300 அல்லது 500 டொலர்கள் செலவு செய்யும் வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும். அது தொடர்பான திட்டங்களை கிழக்கு மகாணத்தில் இருந்து செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார...

சப்ரகமுவ பல்கலைக்கழக 10 மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள், எதிர்வரும் 29ஆம்...

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒற்றுமையைப் பேண புதிய தலைமை வேண்டும் – சமிந்த

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு புதிய தலைமை தேவை என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...