follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP2டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் 2030க்குள் 15 பில்லியன் டொலர் வருமானம்

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் 2030க்குள் 15 பில்லியன் டொலர் வருமானம்

Published on

டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழில்துறை சம்மேளனத்தின் பொருளாளர் இந்திக டி சொய்சா தெரிவித்தார்.

தற்போது டிஜிட்டல் பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை வழங்குவதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின்படி நடைமுறைப்படுத்தப்படும் “DIGIECON Sri Lanka 2030” வேலைத்திட்டத்தின் மூலம் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலக்கை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் இந்திக டி சொய்சா சுட்டிக்காட்டினார்.

“தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாடு – 2023” குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“நிலைபேறான டிஜிட்டல் சமூகத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில், தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டை 41ஆவது தடவையாகவும் இலங்கை கணனி சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இன்று அனைவரும் டிஜிட்டல் பொருளாதாரம் பற்றி பேசுகிறார்கள். உலகின் முன்னேறிய நாடுகள் டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வழங்கப்படும் பங்களிப்பு சுமார் 40% ஆகும். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் 20% பங்களிப்பு வழங்கப்படுகிறது. எமது நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் தற்போது வழங்கப்படும் 5% பங்களிப்பை 20% ஆக உயர்த்தும் இயலுமை எம்மிடம் உள்ளது என இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழில்துறை சம்மேளனத்தின் பொருளாளர் இந்திக டி சொய்சா தெரிவித்தார்.

மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தற்போது வழங்கப்படும் பங்களிப்பான 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை 2030 ஆம் ஆண்டிற்குள் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

DIGIECON 2030 அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக அடுத்த 07 ஆண்டுகளுக்கான வழிகாட்டுதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கை மக்களின் தொழிநுட்ப அறிவை மேம்படுத்துவதில் இன்று ஒரு செயலூக்கப் பங்களிப்பின் தேவை உள்ளது.

2030 ஆண்டுக்குள் டிஜிட்டல் பொருளாதார பிரதான திட்டம் மற்றும் கண்காணிப்புக் கொள்கைக் கட்டமைப்பை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்த இது ஒரு முக்கிய காரணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...