follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுஹம்தியின் வலது பக்க சிறுநீரகத்தை காணவில்லை?

ஹம்தியின் வலது பக்க சிறுநீரகத்தை காணவில்லை?

Published on

சிறுநீகர நோயினால் பாதிக்கப்பட்டு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் இடது பக்க சிறுநீரகம் மட்டுமே தமது பொறுப்பில் இருப்பதாக வைத்தியசாலையில் சிறுநீரக பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் ஷான்தினி குணரத்ன சாட்சி வழங்கியுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் ரசிந்ரா ஜெயசூரிய முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்தோடு எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்த வலது பக்க சிறுநீரகம் தனது பிரிவுக்கு கிடைக்கவில்லை என அவர் மேலும் சாட்சியம் வழங்கியுள்ளார்.

சிறுவனின் மரணம் தொடர்பில் பொரள்ள பொலிசார் வினவிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே குறித்த வைத்தியர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஹம்தியின் இடது பக்க சிறுநீரகம் அமோனியா நீரில் இடப்பட்டு பாதுகாப்பாக தங்கள் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஹம்தியின் வலது பக்க சிறுநீரகம் எந்த பாதிப்பும் இல்லாமல் தேகாரோக்கியமாக இருந்தது என குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் சாட்சி வழங்கியிருந்தார்.

சிறுவன் ஹம்தியின் இடது பக்க சிறுநீரகம் 09 வீதமும் வலது பக்க சிறுநீரகம் 91 வீதமும் செயலாற்றுகையில் இருந்தது என்றும் பணிப்பாளர் தனது சாட்சியில் ஏற்கனவே கூறியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொத்மலையில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்து ஆய்வுக்கு

கொத்மலையில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்தை மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஆய்வு செய்துள்ளது. மோட்டார் போக்குவரத்துத்...

சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை தொடர்பான அறிவித்தல்

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி...

மீனவர் ஓய்வூதியத் திட்டம் விரைவில்

மீனவர் ஓய்வூதியத் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீன்வளச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை...