follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP2இலங்கை கடல் எல்லை வழியாக பயணிக்கும் கப்பல்கள் மூலம் சுமார் 200 மில்லியன் டொலர்கள் வருமானம்

இலங்கை கடல் எல்லை வழியாக பயணிக்கும் கப்பல்கள் மூலம் சுமார் 200 மில்லியன் டொலர்கள் வருமானம்

Published on

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் பயணிக்கும் கப்பல்கள் மூலம் நாட்டுக்கு வருடாந்தம் சுமார் 200 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் வகையில் இலத்திரனியல் கடல்சார் விளக்கப்படங்களை (Electronic Navigation Charts) உருவாக்க தேசிய நீரியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

நாரா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் தற்போதுள்ள கடல்சார் வரைபடங்கள் பிரித்தானிய நீரியல் அலுவலகத்தினால் செயற்படுத்தப்படுவதாகவும், எனவே எதிர்காலத்தில் இலத்திரனியல் கடல்சார் விளக்கப்படங்களை உருவாக்கும் பொறுப்பை கடற்படையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இவ்வாறு தெரிவித்தார்.

கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்தால்தான் இலங்கைக்கு வருமானம் கிடைக்கும் என பலர் நினைக்கின்றனர். ஆனால் அப்படியல்ல, இலங்கைக் கடலில் Sri Lankan Sea நம் நாடு அமைந்திருப்பதால், நம் நாட்டுக்கு அருகில் பயணம் செய்தாலும், எமக்கு வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் நாற்பத்தைந்து கப்பல்கள் வரை நம் நாட்டின் கடல் எல்லை வழியாக பயணம் செய்கின்றன. இவற்றின் மூலம் வருமானம் பெற, நாம் மின்னணுப் பயண விளக்கப்படங்களை (Electronic Navigation Charts) உருவாக்க வேண்டும்.

அந்தப் பொறுப்பை ஏற்று அந்தப் பணியைச் செய்ய நமது கடற்படை தயாராக உள்ளது. அதன் மூலம் அதிக வருமானம் பெறலாம். இதன் மூலம் நேரடி வருமானமாக சுமார் 200 மில்லியன் டொலர்கள் வரை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மறைமுக வருமானம் இன்னும் அதிகமாகும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...