follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP2அக்குரணை அபிவிருத்தி தொடர்பான அறிக்கையை 06 வாரங்களில் கையளிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

அக்குரணை அபிவிருத்தி தொடர்பான அறிக்கையை 06 வாரங்களில் கையளிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

Published on

பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு நேற்று(17) கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

பாரிய கண்டி அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவது தொடர்பில் ஜெய்காவுடன் கலந்துரையாடவுள்ளதாக இது தொடபில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

2023 பெப்ரவரி மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை நன்கு திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்ட நகரமாக மாற்றுவதற்கான பிரேரணை அமைச்சரவையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க தலைமையில் கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதிகாரிகள் மற்றும் நகர திட்டமிடல் துறையில் நிபுணர்கள் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அதற்கிணங்க, கட்டுகஸ்தொட்டை, கண்டி, குண்டசாலை ஆகிய பகுதிகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தி பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டது.

மத்திய மாகாண ஆளுநர் உட்பட கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களிடம் இந்த அபிவிருத்தித் திட்டம் முன்வைக்கப்பட்டு, மேலதிக கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்ற பின்னர், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட இறுதி வரைவு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அபிவிருத்தித் திட்டம் குறித்து விரிவாக மீளாய்வு செய்யப்பட்டதுடன், கண்டி நகரின் வரலாற்று மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, மக்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் கவனம் செலுத்தும் வகையில் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டில் நிறுவப்படவுள்ள பல்கலைக்கழகங்களில் சிலவற்றை கண்டி நகரில் அமைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் கல்விக்கான கேந்திரமாக கண்டி மாறும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் அக்குரணை நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றதுடன், அக்குரணை நகர அபிவிருத்தி தொடர்பான முழுமையான அறிக்கையை 06 வாரங்களில் கையளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக மரிக்கார் நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...

வாகன இறக்குமதி – மத்திய வங்கி மறுப்பு

இலங்கையின் வாகன இறக்குமதியை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரவியிருந்த சில ஊடக அறிக்கைகளை மறுத்து, இலங்கை மத்திய வங்கி...

பிலியந்தலையில் குப்பை மேட்டில் தீ விபத்து

பிலியந்தலையில் உள்ள கரதியான குப்பை மேட்டில் இன்று (08) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தின்...