follow the truth

follow the truth

July, 18, 2025
HomeTOP1"100 இலட்சம் வாக்குகளுடன் ரணில் மீண்டும் ஜனாதிபதி கதிரைக்கு வருவார்"

“100 இலட்சம் வாக்குகளுடன் ரணில் மீண்டும் ஜனாதிபதி கதிரைக்கு வருவார்”

Published on

சர்வதேச தலையீடுகளுக்கு அமைய இலங்கையை சீர்குலைக்கும் செயற்பாட்டிற்கு தேவையான தேர்தலுக்கு இடமளிக்காமல், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அடுத்த வருடத்தினுள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நேற்று (18) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வருடத்தில், முதலில் எந்தத் தேர்தலை நடத்துவது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் போது அதற்கான சந்தர்ப்பத்தை ஜனாதிபதி தெரிவு செய்ய அரசியலமைப்பு அனுமதியளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட வரைவு அரசியலமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டி இருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு இலட்சம் வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதி கதிரையில் அமர முடியும் எனவும் அதற்காக ஒவ்வொரு வீட்டிலும் இருந்து அவருக்கு வாக்களிக்கும் இடத்திற்கு நாடு செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரயிலில் மோதி மற்றுமொரு காட்டு யானை பலி

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் இன்று(18) காட்டு யானை ஒன்று மோதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லெல்ல பகுதியில் அதிகாலை...

9-வளைவு பாலத்தை இரவிலும் பார்வையிட வாய்ப்பு

எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக ரயில்வே...

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்

அரசாங்க விவகாரங்களில் மகா சங்கத்தினரின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை எதிர்பார்ப்பதாகவும், தேசிய, மத மற்றும் சமூக மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை பின்வாங்காமல்...