இந்த பண்டிகை காலத்தில் பேக்கரி தொழில் பெரும் சரிவை சந்தித்துள்ளதாகவும் கிறிஸ்மஸ் பண்டிகையின் போதும் கேக் விற்பனை சுமார் 75 சதவீதம் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.
ஏனெனில் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதுடன், கடந்த ஆண்டுகளை விட கிறிஸ்மஸ் பண்டிகையின் போது கேக் விற்பனை 25 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பேக்கரிகளுக்கு கிடைக்கவில்லை எனவும் இதனால் உள்ளூர் முட்டை 55 ரூபாய்க்கு வாங்கி குறைந்த விலையில் கேக்கை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கே. ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.