கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்துள்ளார்.
வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் நகர அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் நேற்று (01) கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிமேஷ் ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் கலந்துரையாடி விரைவில் அவற்றை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தலைவர் தெரிவித்தார்.