பொதுநலவாய அமைப்பின் சபாநாயகர்களின் (CSPOC) 27வது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உகண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசவேனி, பிரதமர் ரொபின் நபஞ்ஜ, உகண்டா சபாநாயகர் அனிடா அனெத் அமங் ஆகியோரைச் சந்தித்தார்.
அத்துடன், சபாநாயகருக்கும் உகண்டாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஓரியம் ஹென்றி ஒய்கெலோ ஆகியோருக்கும் இடையிலும் சந்திப்பொன்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்புக்களில் இலங்கைக்கும் உகண்டாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் அதிகரிப்பது உள்ளிட்ட பரஸ்பர விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெறும் பொதுநலவாய அமைப்பின் சபாநாயாகர்களின் (CSPOC) 27வது மாநாட்டில் பங்கேற்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர் கடந்த ஜனவரி 03ஆம் திகதி உகண்டா சென்றிருந்தனர்.