follow the truth

follow the truth

July, 17, 2025
Homeஉள்நாடுநாட்டைக் கட்டியெழுப்ப கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

நாட்டைக் கட்டியெழுப்ப கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

Published on

நாடு கண்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், இதற்கான திட்டங்களை ஜனாதிபதி வகுத்துள்ளதாகவும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

தற்போது நாட்டை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த வேலைத் திட்டங்களுக்கு ஆளும், எதிர்கட்சி என்ற பாகுபாடு இன்றி, அனைவரும் கரம்கோர்த்து செயற்படவேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

பிரச்சினைகளை வைத்து, அரசியல் செய்வதென்பது இலகுவான விடயம் என்றும் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே கடினமான விடயம் என்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகைளைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்களையே அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தால் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தற்போது நாம் ஓரளவு மீள் எழுந்து வருகின்றோம். என்றாலும் அது முழுமை பெறவில்லை. அது முழுமை பெற வேண்டுமாயின் நாம் இன்னும் கடுமையாக செயற்பட வேண்டும். அதற்காக ஜனாதிபதி பல திட்டங்களை வகுத்திருக்கின்றார். அரசாங்கம் என்ற வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும் மக்களின் வாழ்க்கைச் சுமை குறைக்கப்பட வேண்டும். ஒரு மரத்தை ஒரே நாளில் வெட்ட முடியும். ஆனால் அந்த மரத்தை உருவாக்க பல வருடங்கள் தேவைப்படும். அதேபோன்று தான் இந்த நாடு பொருளாதார ரீதியில் பாரிய வீழ்ச்சியைக் கண்டது. எனவே அதனை மீட்டெடுக்க காலம் தேவைப்படுகின்றது. ஒரே நாளில் ஒரு மரத்தை நட்டு ஒரே நாளில் அதன் பலனைப் பெற முடியாது. ஏதோ ஒரு வகையில் கடந்த 74 வருடங்களாக இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் விட்ட பிழைகள் மற்றும் தூர நோக்கற்ற சிந்தனை உண்மையில் இந்த நாடு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சிக்குள் சென்றது.

ஆகவே இந்த நேரத்திலே ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடுகளை ஒரு பக்கம் வைத்து விட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இந்த நாட்டு மக்களுக்கான சேவையை, குறிப்பாக வாழ்க்கைச் சுமையைக் குறைக்கக்கூடிய விடயங்களை முன்னெடுக்கவும் நாட்டை மீட்டெடுக்கவும் நாங்கள் அனைவரும் கரம்கோர்த்து செயற்படவேண்டும். அதற்கான காத்திரபூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம் செயற்படுத்திக்கொண்டு வருகின்றது. அவ்வாறான நடவடிக்கைகள் எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் இன்னும் அதிகமாக முன்னெடுக்கப்படும் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்று வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் எனவும் தேயிலையின் தரத்தை...

புதிய கல்வி சீர்திருத்தத்தில் அழகியல், வரலாறு ஆகிய பாடங்கள் நீக்கப்படவில்லை

“புதிய கல்வி சீர்திருத்தத்தில் அழகியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் நீக்கப்படவில்லை. நாம் அரசியல் செய்வோம், ஆனால் அதனை...

ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்கா உரிமையாளர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலயத்தின் உரிமையாளர் இன்று (17)...