தங்காலை, பெலியஅத்த பிரதேசத்தில் இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் கலபொடஅத்தே ஞானசார தேரர் அங்கம் வகித்த எமது ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 8.30 முதல் 8.40 மணி வரை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளை நிற டிஃபென்டர் காரில் பயணித்த 5 பேரை இலக்கு வைத்து பச்சை நிற கெப் வண்டியில் வந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.