follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2பங்களாதேஷ் கட்டிடத் தீயில் குறைந்தது 43 பேர் பலி

பங்களாதேஷ் கட்டிடத் தீயில் குறைந்தது 43 பேர் பலி

Published on

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஆறு மாடி கட்டிடத்தில் ஒரே இரவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 43 பேர் உயிரிழந்துடன் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டாக்காவின் பெய்லி சாலையில் உள்ள பிரபலமான பிரியாணி உணவகத்தில் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஏற்பட்ட தீ, விரைவில் மற்ற தளங்களுக்கும் பரவியதாக தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறைந்தது 43 பேர் இறந்துள்ளனர் மற்றும் 22 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சர் சமந்தா லால் சென் இன்று(01) அதிகாலை டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

“கடுமையான தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 22 பேரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்” என்று சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

13 தீயணைப்புப் பிரிவுகளின் இரண்டு மணி நேர முயற்சிக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதோடு, தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிர் பிழைத்தவர் முகமது அல்தாப், செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“முன்பக்கத்தில் தீப்பிடித்து கண்ணாடி உடைந்ததும், எங்கள் காசாளர் மற்றும் பணியாளர்கள் அனைவரையும் வெளியேற்றினர். ஆனால் இருவரும் பின்னர் இறந்தனர். நான் சமையலறைக்குச் சென்று, ஜன்னலை உடைத்து, என்னைக் காப்பாற்றிக் கொள்ள குதித்தேன்”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...