follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP2உரியவர்களுடன் கலந்துரையாடி எரிபொருள் விலையினையும் குறைக்க எதிர்பார்ப்பு

உரியவர்களுடன் கலந்துரையாடி எரிபொருள் விலையினையும் குறைக்க எதிர்பார்ப்பு

Published on

திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருளின் விலை சூத்திரம் தொடர்பில் உரியவர்களை அழைத்து கேட்டறிந்துகொண்டதன் பின்னர் விலையை மேலும் குறைக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

2024 மார்ச் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் மின்சார கட்டணத்தை 21.9% இனால் குறைக்க முடிந்தது. இருப்பினும் அதற்கு நிகராக உணவு விலைகள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குரியாக உள்ளது. பொது சேவைகளில் ஈடுபடுவோரால் மக்களுக்கு பெருமளவான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் . அதனை மின்சார சபையோ அல்லது அமைச்சுக்களோ செய்ய முடியாது என்பதே எனது நிலைப்பாடாகும்.

மேலும், அண்மைக் காலமாக கிடைத்த பெரும் மழைவீழ்ச்சியின் காரணமாக, மின் உற்பத்தி செயல்பாட்டில் உள்ள பிரச்சினைகளை குறைந்துள்ளது. அதன் பலனாக 2022 ஆம் ஆண்டின் 270 பில்லியன் ரூபா இழப்பீட்டையும் அதனால் சரிசெய்ய முடிந்தது. இருப்பினும் இருள் யுகத்தில் கிடந்த நாடு பொருளாதார முன்னேற்றம் கண்டு வருவதன் பலனாகவே மின்சார கட்டணத்தை குறைக்க முடிந்துள்ளது.

அதனால் மின்சார உற்பத்திச் செலவு பெருமளவில் குறைவடைந்துள்ளதோடு, அதேபோல் மூன்றிலக்க பெறுமதியாக காணப்பட்ட வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளமையும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

மேலும், இந்திய கடனின் கீழ் பெறப்பட்ட 100 மில்லியன் டொலர்களில் முதல் பகுதியைக் கொண்டு, பாடசாலைகள், பாதுகாப்பு முகாம்கள், பல்கலைக்கழகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் மின்சாரம் பெறுவதற்கு சூரிய சக்தி படலங்களை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மின் கட்டணத்தை மேலும் குறைக்க, தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் அல்லது தற்போது அதிக விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்வதை விடுத்து குறைந்த செலவிலான மாற்று முயற்சிகளுக்கு செல்ல வேண்டும்.

2025 ஆம் ஆண்டில் சியாம்பலாண்டுவ மின் உற்பத்தித் திட்டத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் நூறு மெகாவோட் மின்சாரத்தை 25 – 26 ரூபாய்க்கு பெற்றுகொள்ள முடியும். இதேபோன்ற பல பாரிய மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதற்காக ஏராளமான முதலீட்டாளர்கள் எம்மோடு இணைந்துகொண்டுள்ளனர்.

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புதிய முதலீட்டாளர்களுக்காக 10 காற்றாலை மற்றும் சூரிய ஒளி திட்டங்கள் திறக்கப்பட்டுள்ளன. மன்னார் பகுதியை மையமாக கொண்டு 50 மெகாவாட் காற்றாலைக்கான விலைமனு அடுத்த வாரம் கோரப்படும்.

மேலும் உரியவர்களுடன் கலந்துரையாடி எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையினையும் மேலும் குறைக்க எதிர்பார்க்கிறோம் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தானந்த அழுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி...

சூரிய மின்சக்தி படலம் மூலம் 1,700 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி

நாடளாவிய ரீதியில் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1 ஆம் திகதி நிலவரப்படி, மெகாவோட் 1,700...

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர்...