follow the truth

follow the truth

May, 17, 2024
Homeவிளையாட்டு2024 ஒலிம்பிக் விழாவிற்கான சுடர் ஏற்றப்பட்டது

2024 ஒலிம்பிக் விழாவிற்கான சுடர் ஏற்றப்பட்டது

Published on

ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2024 பரிஸ் ஒலிம்பிக் விழாவிற்கான சுடர், புராதன ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரேக்கத்தின் ஒலிம்பியா நகரில் ஏற்றப்பட்டது.

நவீன ஒலிம்பிக் விழாவின் போது சுடரை பேரணியாக ஏந்திச்செல்லும் வழமை 1936 ஆம் ஆண்டு, ஜெர்மனியின் பேர்ளின் ஒலிம்பிக் விழாவின் போது ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர் ஒவ்வொரு ஒலிம்பிக் விழா ஆரம்பமாவதற்கு முன்பும் கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, பேரணியாக எடுத்துச் செல்லப்பட்டு விழாவை நடத்தும் நாட்டிடம் ஒப்படைக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இவ்வாண்டுக்கான சுடரை கிரேக்கம் முழுவதும் 5,000 கிலோமீட்டர்களுக்கு 11 நாட்களாக 600 பேர் ஏந்திச்செல்லவுள்ளனர்.

ஒலிம்பிக் சுடர் எதிர்வரும் 26 ஆம் திகதி பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டு, பரிஸ் ஒலிம்பிக் விழா ஏற்பாட்டுக் குழுவினரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது.

இந்த சுடர் ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் ஒலிம்பிக் விழாவில் ஏற்றப்படவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

குசல் மெண்டிசின் விசா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை இருபதுக்கு 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் அமெரிக்கா...

சசித்ரவின் குரல் பரிசோதனை அறிக்கையில் தாமதம்

கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் விசாரணை...

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன்

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை நிர்வாக சேவையில் (ஓய்வு பெற்றவர்)...