follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉலகம்நேபாள பிரதமர் இராஜினாமா

நேபாள பிரதமர் இராஜினாமா

Published on

நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்) தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன் பிரசந்தா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் இருந்தும் வெளியேறியுள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் வழங்க, அவருடன் அவரது கட்சியைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் தீபக் கார்கியும் இராஜினாமா கடிதத்தினை வழங்கியுள்ளார்.

உபேந்திர யாதவின் கட்சி வெளியேறியது பிரசந்தா தலைமையிலான அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி-என்) கட்சியில் உட்கட்சி பிரச்சினையால் கட்சி இரண்டாக உடைந்தது.

கட்சி தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவுக்கு எதிராக கட்சியின் மத்திய குழு தலைவர் அசோக் ராய் தலைமையிலான குழு போர்க்கொடி தூக்கியது. அதன்பின் இவர்கள் இணைந்து தனிக்கட்சியை உருவாக்கி தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்தனர்.

தாய் கட்சியில் உள்ள நேபாளம் என்ற பெயரை நீக்கிவிட்டு, புதிய கட்சிக்கு ஜனதா சமாஜ்பதி கட்சி (ஜே.எஸ்.பி.) என பெயர் வைத்தனர். ஜனதா சமாஜ்பதி கட்சியை புதிய அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

சமீபகாலமாக ஆளும் கூட்டணிக்கும் நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவர் உபேந்திர யாதவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை எதிர்கொள்வதற்காக பிரதமர் பிரசந்தாவின் ஆலோசனையின் பேரில் அசோக் ராய் கட்சியை உடைத்து புதிய கட்சியை பதிவு செய்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட்...

டெல்லியில் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தடை

15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு இன்று (ஜூலை 1)...

ட்ரம்ப் நிர்வாகத்தின் நிதியுதவி குறைப்பு – உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் சாத்தியம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் மேற்கொண்ட மனிதாபிமான நிதியுதவி குறைப்பு நடவடிக்கைகள், உலக நாடுகள்,...