follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP2கிளப் வசந்தவை கொலை செய்தவர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம்?

கிளப் வசந்தவை கொலை செய்தவர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம்?

Published on

அதுருகிரிய பச்சை குத்தும் நிலையத்தில் கிளப் வசந்த உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், பாடகர் கே. சுஜீவா மற்றும் நால்வர் குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவத்தோடு தொடர்புபட்ட கொலையாளிகள் இருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என விசாரணை குழுக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அவர்கள் தென் கடற்பகுதியில் இழுவை படகில் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இந்த கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டதாக பல இடங்களில் இருந்து தகவல் கிடைத்த நிலையில் அவ்வாறன இடங்களை பரிசோதித்த பொலிசாருக்கு எந்த தடயங்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளப் வசந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 10 பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...

வெளிநாடுகளில் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள்

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் மாணவர்கள் için கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அழைப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு வெளிநாடுகளில்...