வெள்ளப்பெருக்கு காரணமாக டெங்கு நுளம்புகள் பரவுவதை குறைக்கும் வகையில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தை மையமாக வைத்து இன்று இது அமுல்படுத்தப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் இந்த வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.
மேலும் இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.