follow the truth

follow the truth

July, 9, 2025
Homeவிளையாட்டுஇந்தியா- பாகிஸ்தான் போட்டி நிலவில் நடந்தாலும் கூட... மகிழ்ச்சி - முகமது அமிர்

இந்தியா- பாகிஸ்தான் போட்டி நிலவில் நடந்தாலும் கூட… மகிழ்ச்சி – முகமது அமிர்

Published on

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்த ஐசிசி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

இதனால் பாகிஸ்தான்- இந்தியா இடையிலான போட்டி நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

ஐசிசி-யின் இந்த முடிவை பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக முகமது அமிர் கூறுகையில்;

“ஒரு கிரிக்கெட்டராக, இந்தியா- பாகிஸ்தான் போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் நிலவில் நடைபெற்றாலும் கூட, ரசிகர்கள் அதற்கான வழியை கண்டுபிடிப்பார்கள்.

முக்கியத்துவம் போட்டியில் உள்ளது. போட்டி நடைபெறும் இடத்தில் உள்ளது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலைப் பார்க்க விரும்புவோர் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

2031 வரையிலான போட்டியை ஐசிசி அறிவித்துள்ளது. ஆனால் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான வேலையை இரண்டு மாதத்திற்கு முன்பு ஐசிசி தொடங்கியது ஏன்?. ஐசிசி-யின் செயல்பாடு மிக மிக சோம்பேறித்தனமாக உள்ளது” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில்...

பங்களாதேஷூக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி பல்லேகல மைதானத்தில் தற்சமயம் இடம்பெறுகிறது. போட்டியில் நாணய...

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் குசல் மெண்டிஸ் சதம்

இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் ஒருநாள் போட்டிகளில் தமது ஆறாவது சதத்தைப் பெற்றுள்ளார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு...