follow the truth

follow the truth

January, 24, 2025
HomeTOP1ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த அறிக்கை

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த அறிக்கை

Published on

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி இதுவரை 747 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், உயர் நீதிமன்றில் 14 வழக்குகளில் 100 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், சேனல் 4 ஊடாக வெளியான உண்மைகள் மற்றும் அதற்குப் புறம்பான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிப்படுத்தப்படும் உண்மைகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், இந்த விசாரணைகள் புதிய கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதன்படி, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, 12 சிவில் சாட்சிகள், 7 இராணுவத்தினர், 24 பொலிஸ் அதிகாரிகள், 3 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 48 பேரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விவசாயிகள் அரசிடம் கோரிக்கை

நெல்லுக்கு உத்தரவாத விலையை உடனடியாக வழங்குமாறு விவசாய அமைப்புகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன. தேசிய ஐக்கிய விவசாயிகள் அமைப்பின் செயலாளர் நிஹால்...

சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மலைப்பகுதிகளின் வீதிகளில் வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு சாரதிகளுக்கு தேசிய கட்டிட...

புலமைப்பரிசில் பரீட்சை : நாடளாவியரீதியில் முதலிடம் பெற்ற மதிப்பெண் 188

2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...