எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
தபால் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தை நடத்த முடிவு செய்ததாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு சங்கத்தின் செயலாளர் மஞ்சுள ஜயசுந்த தெரிவித்தார்.
பிரச்சினைகள் குறித்து தபால்மா அதிபருடன் கலந்துரையாடியதாகவும், இதன்போது எந்தவித சாதாரண நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறிவிட்டதாகவும், எனவே இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.