follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP2கொழும்பில் கால்வாய்கள், வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பில் கால்வாய்கள், வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

Published on

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார்.

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இன்று (20) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கொழும்பு மாவட்டத்தில் கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்புகளை முறையாகப் பேணாமை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, குப்பை மற்றும் கழிவுநீரை முறையாக அகற்றுவது குறித்து நிலையான தீர்வுகளுடன் கூடிய திட்டத்தைத் தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தினார். அது குறித்த திட்டங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் மேலும் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் பொலிஸாரை பலப்படுத்தல் மற்றும் சமூக குழுக்களின் செயலூக்கமான பங்களிப்பைப் பெறுவதன் ஊடாக முறையற்ற கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமையில் – கோப் குழு

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமையில் உள்ளதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் புலப்பட்டது. ஸ்ரீ...

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகம் தலைமையில் குழு

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையில் குழுவொன்றை...

வங்கிக் கணக்குகளைத் ஆரம்பிக்க TIN இலக்கம் கட்டாயம்

கடந்த ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 18 இலட்சம் ரூபாவுக்கும் விஞ்சாத தொகையை வருடாந்த வருமானமாகப் பெறுவோருக்கு...