பொரளை – வனாத்த பகுதியில் இன்று (24) மாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், இச்சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.