எண்ணெய் கொள்முதல் செய்யும் போது விலைமனு கோரல் செயல்பாட்டில் US West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெயைச் சேர்ப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
வளைகுடா பிராந்தியத்திலிருந்து இலங்கைக்கு எண்ணெய் தற்போது இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறிய அவர், மேலதிகமாக, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட கச்சா எண்ணெயை டெண்டர் செயல்பாட்டில் சேர்ப்பது குறித்து தற்போது விவாதங்கள் நடந்து வருவதாகக் கூறினார்.
விலைகளின் அடிப்படையில் இரண்டு வகைகளில் எந்த வகையை இலங்கைக்கு இறக்குமதி செய்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.