அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண ஹொக்கி போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் ஹொக்கி அணியை அனுப்ப முடியாது என்று அந்த நாட்டின் ஹொக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
வீரர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஹொக்கி சம்மேளனம் சர்வதேச ஹொக்கி சம்மேளனத்துக்கு அறிவித்துள்ளது.
இந்த போட்டிகள், உலகக் கிண்ணத்துக்கான நேரடி தகுதி வாய்ப்பை அளிப்பதால் மிகவும் முக்கியமானவை எனக் கருதப்படுகின்றன. இருப்பினும், பாகிஸ்தானிய வீரர்கள் இந்தியாவிற்குப் பயணிக்க ஆர்வம் காட்டவில்லை என்றும் சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.
சர்வதேச ஹொக்கியில் பெரும் பெயருடனும், பன்முறை சாம்பியனாகவும் விளங்கிய பாகிஸ்தான், தற்போது உலகத் தரவரிசையில் 15வது இடத்தில் உள்ளது.