அமெரிக்காவின் தீர்வை வரி தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடல் சூம் தொழில்நுட்பத்தினூடாக இன்று(23) முன்னெடுக்கப்படவுள்ளது.
இரு தரப்பினருக்கிடையிலான இறுதி இணக்கப்பாடுகளின் அடிப்படையிலான இருதரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாக நிதி பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.