‘வெளிநாட்டவர்களுக்கு மட்டும் ‘Foreigners Only’ என்ற கொள்கையை பின்பற்றும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உரிமம் இரத்து செய்யப்படுமென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை எச்சரித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இலங்கைப் பிரஜைகளுக்கு எதிராக சில சுற்றுலா நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் பாரபட்சமான நடைமுறைகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.