கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுகின்றமையினால் எதிர்காலத்தில் தீர்க்கமான முடிவுகளை பெற வேண்டிய நிலை காணப்படுவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் கொவிட் தொற்றாளர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்றைய தினம் முதல் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும், சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமெனவும் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீண்ட வாரஇறுதி நாட்களில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட நபர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சுகாதாரத் துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.