follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP1கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு பேராயர் விஜயம்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு பேராயர் விஜயம்

Published on

பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தின் மீதான குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய  சந்தேக நபரை கைது செய்தமை தொடர்பில் விசாரிப்பதற்காக கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு விஜயம் செய்தார்.

பொரளை அனைத்து புனிதர் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் பிரதான சந்தேகநபராக ஓய்வு பெற்ற வைத்திய அத்தியட்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், முனி என்ற சந்தேக நபரின் இருப்பிடம் குறித்து விசாரிப்பதற்காக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பல ஆயர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு இன்று வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கை

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இன்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை...

பிரதமரின் தேர்தல் விதிமீறலுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை – தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அமைதி காலத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய...

பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – எதிர்க்கட்சித் தலைவர்

பலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகி, அவர்களின் வாழும் உரிமைகளும் மனித உரிமைகளும் பறிக்கப்படும் காலத்தை கடந்து கொண்டிருப்பதாகவும்...