follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஇந்திய வெளிவிவகார அமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

Published on

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று(29) பிற்பகல் இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம் பெற்றது.

இந்நெருக்கடியான தருணத்தில் இந்தியா தனது சகோதரத்துவக் கரத்தை இலங்கைக்கு நீட்டியதற்கு நன்றி தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதுவரை இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால இரு தரப்பு உறவு மற்றும் அது எந்தளவிற்கு பொருளாதார, கலாச்சார மற்றும் சமூக ரீதியில் பரவியுள்ளது என்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் நினைவு கூர்ந்தார்.

இலங்கை மீண்டெழுவதற்கு முழுமையான ஆதரவையும் உதவியையும் வழங்குமாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறான உதவிகளை மக்கள் மிகவும் பயனுள்ளதாகப் பயன்படுத்துவதற்கான திட்டத்திற்கு தேவையான ஆதரவை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, வடிவேல் சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஜெயசங்கர் சந்தித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரிடம்...

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக “ஒரு அழகான வீடு -...