follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுஇன்றைய ஜனநாயகத் தருணம் - செயலுக்கும் சிந்தனைக்குமான ஓர் அழைப்பு

இன்றைய ஜனநாயகத் தருணம் – செயலுக்கும் சிந்தனைக்குமான ஓர் அழைப்பு

Published on

காலனித்துவத்திற்குப் பிற்பட்ட எமது வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராதவாறான சம்பவங்களை இன்று நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கின்றோம். ஜனநாயக உணர்வு மேலீட்டின் வியப்பூட்டும் வெளிப்பாடாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் தாமாகவே வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மாற்றத்துக்கான அவர்களது கோஷங்கள் உரப்புடனும், சக்தியுடனும், பிரமிக்க வைக்கும் வகையிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பொது மக்களின் கோபமெல்லாம் ஒரு பரம்பரைசார் அரசியல் பேரரசு ஒன்றினை உருவாக்கியிருக்கும் ராஜபக்சர்கள் என அழைக்கப்படும் சிறிய உயர் குழாத்தினர் மீதும், பாராளுமன்றத்தினுள்ளும், வெளியிலும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அவர்களின் நெருங்கிய சகாக்கள் மற்றும் கூட்டாளிகள் மீதும், அவர்களுக்கு ஒத்தாசையாகச் செயற்பட்ட வியாபாரத் தரப்பினர் மீதும் திரும்பியுள்ளது. கடந்த சில தசாப்தங்களில், எமது நாடு கண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடிகளிலே ஒன்று மக்களை வீதிகளுக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. அந்த மக்கள் இப்போது ஜனாதிபதியினை நோக்கி, பதவியினைத் துறந்து விட்டு வீடு செல்லுமாறு கோருகின்றனர்.

மாற்றத்துக்கான இக் கோரிக்கைகள் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தினை மாத்திரமல்லாது, அரசாட்சியின் பல வடிவங்களையும் அப்புறப்படுத்துவதுடன் தொடர்புபட்டுள்ளன. ஆர்ப்பாட்டம் செய்வோர் கடினமான பல கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

எமது பொருளாதாரக் கொள்கைகள், நீதித் துறையின் செயற்பாடுகள், சமூகங்களுக்கிடையிலான உறவுகள் மற்றும் இந்த விடயங்களுடன் தொடர்புபட்ட ஏனைய விடயங்கள் போன்றன இந்தக் கேள்விகளின் கருவாக அமைந்துள்ளன. பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்பதிலே மக்கள் உறுதியாக உள்ளனர். உணவு, மருந்து, பால் மா, மின்சாரம், எரிவாயு (காஸ்), எழுதுபொருட்கள் போன்ற அத்தியாவசிய பண்டங்கள் போதுமான அளவிலே தமது குடும்பங்களுக்குக் கிடைக்க வேண்டும் என அவர்கள் கோருகின்றனர். சூறையாடப்பட்ட மக்களின் பணம், மீளப்பெறப்பட்டு மக்களிடையே பகிரப்பட வேண்டும் எனப் பல சமூகங்கள் கோரி வருகின்றனர். இன மத ரீதியிலான பிரிவினையைத் தூண்டும் அரசியல் ஒழிக்கப்பட்டு, கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும், வன்முறைகளுக்கும் பொறுப்புக் கூறப்பட வேண்டும் எனப் பலர் கோருகின்றனர்.

சர்வாதிகாரத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு நாடு தமக்கு வேண்டும் என மக்கள் ஐக்கியத்துடன் குரல் எழுப்புகின்றனர். அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் பாலினம் சார் நியாயங்களையும், நீதியினையும் கோரும் மக்களின் இந்த பல்குரற் கோஷங்கள் கேட்கப்பட வேண்டியவை; அவற்றுக்குரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

பாரியளவில் கடன்பட்டிருக்கும் எமது அரசாங்கம், அத்தியாவசிய இறக்குமதிகளைப் பெற்றுத் தரத் திராணியற்றுப் போனமை நாட்டிலே ஏற்கனவே உருவாகி இருந்த பொருளாதார நெருக்கடியினை மேலும் சிக்கலாகியது. இந்தச் சூழலிலேயே போராட்டங்கள் வெளிக்கிளம்பின. இரசாயன உரங்களின் இறக்குமதியினைத் தடை செய்தல் போன்ற அரசாங்கத்தின் தான் தோன்றித்தனமான முடிவுகள் விவசாய உற்பத்தியினை மோசமாகப் பாதித்தன.

உணவு, மருந்து, எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் பற்றாக்குறைகளும், அபரிமிதமான விலை அதிகரிப்புகளும் மக்களினை சுமைக்குள்ளாக்கின. இந்த நிலைமைகள் உழைக்கும் வர்க்கத்தினர், கீழ்மட்ட வர்க்கத்தினர், பலவகைகளிலும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் மீது பாரதூரமான தாக்கங்களை உருவாக்கின. இவர்களின் நிலைமை கோவிட்- 19 நோய்த்தொற்றின் காரணமாக மேலும் அபாயத்துக்கு உள்ளாகியது.

இந்த நெருக்கடியின் தோற்றுவாய்கள் அரசியலுடன் தொடர்புபட்டவை. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சர்வாதிகார அரசாங்கங்களின் கொள்கைகளே இன்றைய நெருக்கடிக்குக் காரணங்களாக அமைகின்றன. இவ்வாறான ஆட்சி முறையானது, சிங்கள- பெளத்த பெரும்பான்மைவாத ரீதியிலான அணிதிரட்டல்களின் ஊடாகப் பலப்படுத்தப்பட்டு வந்தது. இந்தப் போக்கின் மிக அண்மைய வடிவங்களில் ஒன்றே கோவிட்டினால் இறந்த முஸ்லிம்களின் உடலங்கள் மீது கட்டாயத் தகனம் திணிக்கப்பட்டமை. சமூகத்தின் தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்காது, அதிகாரம் மிக்க, தொழில்முறைசார், இராணுவப் பாங்கான குணாதிசாயங்களைக் கொண்ட செல்வந்த ஆண்களினால் நாடு முன்னடத்தப்பட வேண்டும் என்ற கருத்தியலின் மீது இந்த ஆட்சி முறையானது கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறான கருத்தியல்கள் விளிம்புநிலை மக்கள் மீது பாகுபாடு காண்பிக்கும் அதேவேளை, பன்மைத்துவத்துக்கான சந்தர்ப்பங்களையும் மட்டுப்படுத்தியுள்ளன. இந்தக் கருத்தியல்கள் கூடியளவிலான இராணுவமயமாக்கலினையும், சமத்துவமின்மையினையும், அநீதியினையும் உருவாக்கியுள்ளன. அவை ஜனநாயகபூர்வமான கூட்டு நடவடிக்கைகளுக்கான வெளியினை மட்டுப்படுத்தி, அதற்குப் பதிலாக, மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தையும், மக்கள், அரசியல்வாதிகளின் தயவில் தங்கியிருக்க வேண்டியிருக்கின்ற அரசியற் கலாசாரத்தினையும் உருவாக்கியுள்ளன.

இன்றைய நெருக்கடியினைத் தீர்க்கும் வகையிலே முன்வைக்கப்படும் தீர்வுகள் நிலைமையினை மேலும் மோசமாக்காது இருப்பது மிகவும் அவசியம். பிரச்சினைக்குத் தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு ஒன்று இடம்பெறும் என இன்று பேசப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தினை மிகவும் உன்னதமான தீர்வாக நோக்குகின்ற நவதாரளவாத பொருளாதாரச் சிந்தனை எல்லா அரசியல் நிலைப்பாடுகளினை வைத்திருப்போர் மத்தியிலும் வேரூன்றி உள்ளது.

எனினும் இந்த நெருக்கடிக்கு எம்மை இட்டுச் சென்றதே பல தசாப்தங்களாக நாம் பின்பற்றி வரும் நவ தாராளவாதக் கொள்கைகள் தான் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும். நவதாராளவாதக் கொள்கைகள், சமூகம் மீதான அக்கறைகளை விடுத்து, தனிநபர் சொத்துடைமைகளையும், உரிமைகளையும், சுதந்திர சந்தைகளையுமே ஊக்குவிக்கின்றன. உலகளாவிய ரீதியில் போக்குவரத்து, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகள் மோசடிகளுக்கும், தனிப்பட்ட இலாபமீட்டல்களுக்குமான களங்களாகக மாறிவருவதோடு, அரசாங்கங்கள் இவ்வாறான நவதாராளவாதப் போக்குகளை ஆதரிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறான சேவைகளினை அரசு மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாது செய்யப்பட்டுள்ளது, அதேபோல, இந்த சேவைகள் பொதுமக்களுக்கு உரியவை அல்ல என்ற நிலைப்பாடும் வளர்த்தெடுக்கப்படுகின்றது. இதன் காரணமாக அரசின் வகிபங்கானது நலிவடைந்துள்ளதுடன், சந்தைகளின் மாறுபாடுகளின் தாக்கத்தின் காரணமாக மக்கள் பாதிப்படைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமூக நலனுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவதை நாம் கண்ணுற்றுள்ளோம். கட்டுப்பாடுகளின் நீக்கமும், தனியார்மயமாக்கலும் இன்று சாதாரணமாகிவிட்டன.

தன்னிறைவுக்கு இட்டுச் செல்லும் உற்பத்தியினை வளர்த்தெடுப்பதனை விடுத்து, வெளி நாட்டு வேலையாட்களின் சுரண்டப்பட்ட ஊதியத்திலும், சர்வதேசக் கடனிலும் தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு இடம்பெறும் பட்சத்தில், மேற்கூறியவற்றை நாம் மனதில் கொள்ளுதல் அவசியம்.

பொருளாதார நெருக்கடிக்கான குறுகியகாலத் தீர்வாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். மீள்பகிர்ந்தளிப்பு மற்றும் கூடிய சமத்துவத்தினை நோக்கிச் செல்லும் வகையில், சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் மீதான செல்வ வரிகள் உள்ளங்கடலான அதிகரித்துச் செல்லும் நேரடி வரியினை நாம் கோர வேண்டும். இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவிலே குறைக்கப்பட வேண்டும் என்பதனையும், சுகாதாரம், கல்வி, மின்சாரம், நீர் விநியோகம், போக்குவரத்து போன்ற முக்கியமான பொதுச் சேவைகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு அவற்றினை வலிமைப்படுத்த வேண்டும் என நாம் வலியுறுத்த வேண்டும். காணியற்றோர் வீடுகளை அமைப்பதற்கும், விவசாயத்தினை மேற்கொள்ளுவதற்கும், வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அவர்களுக்கு உதவும் வகையில் காணி நிலங்கள் வழங்கப்பட வேண்டும்.

இன்றைய இந்த ஜனநாயகமான தருணத்தினை நாம் விரிவுபடுத்தி, திட உருவாமாக்கி, நிலைத்திருக்கக் கூடிய ஓர் அரசியல் செயற்பாடாக மாற்றியமைக்க வேண்டும். நீண்ட காலத்திலே கட்டமைப்பு மாற்றங்கள் உருவாகும் வகையில் நாம் எமது கோரிக்கைகளை முன்னிறுத்த வேண்டும். பொதுப் பாதுகாப்புச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற கொடூரமான சட்டங்கள் வாபஸ் பெறப்பட வேண்டும். இராணுவத்திற்கான நிதியைக் குறைத்து, இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காணிகளை விடுவித்து, இராணுத்தினரைப் படைமுகாம்களுக்குள் மட்டுப்படுத்தி, இராணுவமய நீக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும். மையங்களிலிருந்து விளிம்புகளை நோக்கி அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை, அதிகாரத்தை ஒரு மையத்தில் குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட 20ஆம் சீர்திருத்தம் போன்றவை ஒழிக்கப்பட வேண்டும். மாறாக, தீர்ப்பாயங்கள், சுயாதீன ஆணைக்குழுக்கள், சுயாதீன நீதித்துறை போன்ற வழிமுறைகள் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பன்மைத்துவம் வளர்த்தெடுக்கப்படல் வேண்டும்.

இன்றைய வரலாற்று முக்கியத்துவம் மிக்க தருணத்திலே, எம்மத்தியிலே தோழமையுணர்வு மேலோங்க வேண்டும் என மக்களாக நாம் அழைப்பு விடுக்கின்றோம்! எங்கள் எல்லோருக்கும் நியாயமான, ஜனநாயகமான ஒரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக, தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், பெண்கள் குழுக்கள், ஒதுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட, அதிருப்திக்குள்ளான சமூகங்கள் என அனைவரையும் உள்ளடக்கிய ஒரு இயக்கத்தின் உருவாக்கத்திற்காக நாம் அழைப்பு விடுகின்றோம்.
கையொப்பமிடுபவர்:

1. Ruchini Abayakoon, McMaster University, Ontario, Canada
2. Udari Abeyasinghe, University of Peradeniya
3. Asha L. Abeyasekera, Royal Holloway, University of London
4. Asanka Abeyratne, Social Activist
5. Sachini Abeysekara, Brock University
6. Mohamed Adamaly, Attorney at Law
7. S.L. Usman Akeel, Daily Ceylon
8. Indi Akurugoda, University of Ruhuna
9. Ashwini Amarasinghe , University of Peradeniya
10. M. A. M. S. Anaf, Kalmunai
11. Shani Anuradha, University of Peradeniya
12. Nalin Galkanda Arachchi, University of Vocational Technology, Ratmalana
13. S. Arivalzahan, University of Jaffna
14. Swasthika Arulingam, Attorney at Law
15. Odayan Arumugam, Trainer/Community Activist, Colombo
16. Mohamed Ashfaque, Akkaraipattu
17. A. N. Ashiq, Karaithivu
18. Dhilma Atapattu, University of Peradeniya
19. Fazeeha Azmi, University Of Peradeniya
20. Crystal Baines, Ph.D. Candidate, Kandy
21. Dhanuka Bandara, Miami University of Ohio
22. Sumudu Bandara, University of Peradeniya
23. Bisliya Bhutto, Human Rights Activist
24. Rudhramoorthy Cheran, University of Windsor
25. A.S.Chandrabose, Open University of Sri Lanka
26. Sasindi Chandrasekara
27. Visakesa Chandrasekaram, University of Colombo
28. Kaveesha Coswatte, APIIT Law School
29. Chamalee Ahangama Dayarathna, Counselor
30. Ruwanthie de Chickera, Playwright
31. Jan Ramesh de Saram, Colomboscope
32. Erandika de Silva, University of Jaffna
33. Marisa de Silva, Colombo
34. Mithma De Silva, University of Peradeniya
35. Priyanka de Silva, University of Peradeniya
36. Sulari de Silva, University of Moratuwa
37. Hiranyada Dewasiri; Uva Wellassa University of Sri Lanka
38. Nirmal Ranjith Dewasiri, University of Colombo
39. Janaranga Wijaindu Dewasurandra, The Family Planning Association of Sri Lanka
40. Kaushini Dammalage, Independent Researcher
41. Kanchuka Dharmasiri, University of Peradeniya
42. Chirath Dharmasena
43. Visakha Dharmadasa, AWAW
44. Shanka Dharmapala, independent researcher
45. Malaka Dewapriya, Filmmaker and Visual Artist
46. Priyan Dias, University of Moratuwa
47. Migara Doss, Attorney at Law
48. Ruwanthi Edirisinghe, City University of New York
49. Sarala Emmanuel Feminist Activist Batticaloa
50. Sandya Ekneligoda, Social Activist
51. Diroshan Fernando
52. Sasindi Fernando, student
53. Amal Fernando, Kandy
54. Avanka Fernando, University of Colombo
55. Corita Fernando, Washington State University
56. Bhavani Fonseka, Attorney-at-Law
57. Gnanabalan Gnanalosan, Point Pedro, Jaffna
58. Mario Gomez, International Centre for Ethnic Studies
59. Thilanka Gunaratne, University of Peradeniya
60. Lesley Gunasekara, Independent Researcher
61. Ranmini Gunawardena, University of the Visual and Performing Arts
62. Dileni Gunewardena, University of Peradeniya
63. Camena Guneratne, Open University of Sri Lanka
64. Ashika Gunasena, Independent practitioner
65. Tasneem Hamead, Colombo
66. Azkha Hassen, Al Gazzaly NS
67. Farzana Haniffa, University of Colombo
68. Hasna Hasbullah, undergraduate, University of Jaffna
69. Jafar Hasbullah, University of British Columbia
70. Samal Hemachandra, University of Colombo
71. Dhammika Herath, University of Peradeniya
72. Himansa Herath
73. Siri Hettige, University of Colombo
74. Rajan Hoole, Jaffna
75. J. S. Ishie, Ministry of Health
76. J. Prince Jeyadevan, University of Jaffna
77. K.W. Janaranjana, editor, Anidda newspaper
78. Velayudan Jayachithra, Senior Project Officer, Women and Media Collective
79. Sumedha Jayakody, Independent Researcher
80. Pamoda Jayasundara, University of Peradeniya
81. Gehan Jayasuriya, University of Peradeniya
82. Shakila Jayathilaka
83. Barana Jayawardana, University of Peradeniya
84. Chulantha Jayawardena, Univ. Of Moratuwa
85. Janaki Jayawardena, University of Colombo
86. Uthpala Jayawardena, The Open University of Sri Lanka
87. Pavithra Jayawardena, University of Colombo
88. Ahilan Kadirgamar, University of Jaffna
89. Sakuntala Kadirgamar, Law and Society Trust
90. Akhila Kahandagama, Concerned citizen
91. Anushka Kahandagamage, University of Otago
92. Pavithra Kailasapathy, University of Colombo
93. Saman M Kariyakarawana, University of The Visual and Performing Arts
94. Thisal Kaluarachchi, University of Moratuwa
95. Maduranga Kalugampitiya, University of Peradeniya
96. Anuruddha Karunarathna, University of Peradeniya
97. Ransi Karunarathna, Sri Lanka Press Institute
98. Inoka Karunaratne, University of Peradeniya
99. Amal Karunaratna, Retired from the University of Adelaide
100. Apsara Karunaratne, independent researcher
101. Charuka Karunarathne
102. Inoka Karunaratne, University of Peradeniya
103. Ransi Karunarathna, Sri Lanka Press Institute
104. Portia Kemps, University of Peradeniya
105. Thamali Kithsiri, University of Peradeniya
106. Chulani Kodikara, University of Edinburgh
107. Manikya Kodithuwakku, Open University of Sri Lanka
108. Sandamali Kottachchi, Attorney-at-law
109. Mahaluxmy Kurushanthan, Mannar Women’s Development Federation.
110. Pradeepa Korale Gedara, University of Peradeniya
111. Chamali S. Kulathunga, University of Peradeniya
112. Ramya Kumar, University of Jaffna
113. Shamala Kumar, University of Peradeniya
114. Vijaya Kumar, University of Peradeniya
115. Amal Kumarage, University of Moratuwa
116. Radha Kuruwitabandara, Attorney-at-Law
117. A.H. Lareena, Lecturer
118. Hasini Lecamwasam, University of Peradeniya
119. Menaka Lecamwasam, Independent researcher
120. C. Liyanage, Attorney-at-law
121. Saumya Liyanage, University of the Visual and Performing Arts
122. Mary Caroline Lurthunayaham, Wellawatta
123. Gunasingarajah Maheshwaralingam, University of Jaffna
124. Sudesh Mantillake, University of Peradeniya
125. Prabha Manuratne, University of Kelaniya
126. Ruvinie Machado, Colombo
127. Dulanjaya Mahagamage, Kandy
128. Tharinda Mallawaarachchi – University of Colombo
129. Anton Marcus, Joint Secretary, Free Trade Zones and General Services Employees’ Union
130. Kalindu Matharage, Independent
131. Sumudu Himesha Medawela, University of Peradeniya
132. Mahim Mendis, The Open University of Sri Lanka
133. Navindu Mendis, National Christian Evangelical Alliance of Sri Lanka
134. Juweriya Mohideen, Muslim Women’s Development Trust, Puttalam
135. Alikhan Mohideen, University of Peradeniya
136. Sakina Moinudeen, Colombo
137. S.P.Mohan, Heart’s Organisation Upcot
138. Rumala Morel, University of Peradeniya
139. Chathurika Munasinghe, University of Peradeniya
140. Thaha Muzammil, Free Media Movement
141. Kethakie Nagahawatte, University of Colombo
142. Amizhthini Nakkeeran, Aze IT Consultancy (pvt) Ltd, Jaffna
143. S. Narththanah, Rajarata University of Sri Lanka
144. Pavithra Navarathne, Attorney-at-Law
145. Pamod Nayanapiya
146. Ammaarah Nilafdeen, Independent Researcher
147. Abeysinghe Navaratne-Bandara, Retd. University of Peradeniya
148. Sabreena Niles, University of Kelaniya
149. Hasanthi Niriella
150. M. A. Nuhman, Retd. Univ. Of Peradeniya
151. Ranjini Obeyesekere Formerly Princeton University and University of Peradeniya
152. Upali Pannilage, University of Ruhuna
153. Sasinindu Patabendige, University of Jaffna
154. Muditha Pathirana, Independent Researcher
155. Nirmala Perera
156. Oshada Perera, Kandy
157. Paba Piyarathne
158. Srinagaruban Pathujan, University of Jaffna
159. Eshantha Peiris, University of Peradeniya
160. Pradeep Peiris, University of Colombo
161. Sanjeeva Pieris
162. Kaushalya Perera, University of Colombo
163. Kusal Perera, Political commentator, Journalist
164. Nicola Perera, University of Colombo
165. Nirmala Perera
166. Tania Perera, Colombo
167. Amalka Pinidiyaarachchi, University of Peradeniya
168. Dimagi Pitawala, University of Peradeniya
169. Ven. Fr. Samuel Ponniah, Church of Ceylon
170. Padma Poshpakanthi, Savisthri National Women’s Movement/ Women Acton for Social Justice
171. N. W. Prins, University of Ruhuna
172. Angel Queentus, Jaffna Transgender Network
173. Mirak Raheem, Independent Researcher
174. S. Rajadurai, University of Colombo
175. Chandi Rajapaksha, University of Peradeniya
176. Maheema Rajapakse, APIIT
177. Selvaraja Rajasegar, editor, maatram.org
178. Shafiya Rafaithu, Independent Researcher
179. Rupika Rajakaruna, University of Peradeniya
180. Vasuki Rajasingam, Jaffna
181. Sampath Rajapakshe, Lecturer
182. Tharsiga Ramanaaharan, Jaffna
183. Ramesh Ramasamy, University of Peradeniya
184. Harshana Rambukwella, Open University of Sri Lanka
185. Kanchana Virajani Ranaraja, Kandy
186. Piyumani Ranasinghe, Attorney-at-Law
187. Rajitha Ranasinghe, University of Peradeniya
188. Menaka Rathnayaka, University of Peradeniya
189. Sriyani Ranatunga, Research Assistant, University of Peradeniya
190. Dilini Ratnayaka, University of Peradeniya
191. Rev. M. V. E. Ravichandran, University of Jaffna
192. Ramzy Razeek, Social Activist
193. Rasma Razmi, University of Peradeniya
194. Stephini Sahid, Secondary School Teacher, Kandy
195. T. H. Rasika Samanmalee, University of Colombo
196. Aruni Samarakoon, University of Ruhuna
197. Dinesha Samararatne, University of Colombo
198. Gameela Samarasinghe, University of Colombo
199. Ganganee Samaraweera, University of Ruhuna
200. Unnathi Samaraweera, University of Colombo
201. Shreen Abdul Saroor, Women’s Action Network
202. Kalana Senaratne – University of Peradeniya
203. Hiniduma Sunil Senevi, Sabaragamuwa University of Sri Lanka, Belihuloya
204. Sharmila Seyyid, Author and Researcher
205. Tudor Silva, University of Peradeniya
206. Shashik Silva, Independent Researcher
207. Vanie Simon, Affected Women’s Forum, Akkaraipattu
208. Krishan Siriwardhana , University of Colombo
209. Dr. K. Sivaji, University of Jaffna
210. Ratnasingam Sharveswara, University of Jaffna
211. S. Sivagurunathan, Interpreter and translator
212. N. Sivakaran, University of Jaffna
213. Gopikha Sivakumar, Undergraduate, University of Jaffna
214. Sumathy Sivamohan, University of Peradeniya
215. Taniya Silvapulle, Social Scientists’ Association
216. S. Sivasegaram, retired University of Peradeniya
217. Gnani Somasundaram, Lanka Hospitals
218. M. Sooriasegaram, Jaffna
219. H. Sriyananda, The Open University of Sri Lanka
220. Ermiza Tegal, Attorney-at-Law
221. Dayapala Thiranagama, formerly University of Kelaniya
222. Mahendran Thiruvarangan, University of Jaffna
223. Darshi Thoradeniya, University of Colombo
224. Yathursha Ulakentheran, Independent Researcher
225. Ramila Usoof, University of Peradeniya
226. Nimali Vineeshiya, PGIHS, University of Peradeniya
227. Chethiya Waththuhewa, University of Peradeniya
228. Manisha Weeraddana , University of Peradeniya
229. Ishan Weerapura, Social Scientists’ Association
230. Dasuni Weerasinghe, Attorney-at-law
231. Devaka Weerasinghe, Colombo
232. Ruvan Weerasinghe, University of Colombo
233. Shiran Harsha Widanapathirana, APIIT
234. Amali Wedagedera, University of Hawaii
235. Poornima Weerasinghe
236. John Wesley, University of Peradeniya
237. Carmen S. Wickramagamage, University of Peradeniya
238. W. Namal M. Wickramasekera, University of Colombo
239. Maithree Wickramasinghe, University of Kelaniya
240. Upul Wickramasinghe, University of Durham
241. Priyan R. Wijebandara, Journalist
242. Gayatri Wijekoon, University Lecturer
243. Ranjit Wijekoon, Colombo
244. Asanka Wijesinghe, Economics researcher
245. Maneesha Wijesundara, University of Peradeniya (former student)
246. Dinuka Wijetunga, University of Colombo
247. Roshani Wijewardene
248. Shermal Wijewardene, University of Colombo
249. Apsara Wimalasiri, Colombo
250. Lareef Zubair, Independent Researcher

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...