மதத் தலைவர்களுக்கு புத்தசாசன அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

1128

இதுவரை கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத சமயத் தலைவர்கள் அதுதொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலகத்திற்கு அறிவிக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமய தலைவர்களிடம் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக சகல சமய தலைவர்களுக்குமான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, இந்து சமயத் தலைவர்கள் 071 44 71 128 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும், இஸ்லாமிய சமய தலைவர்கள் 076 13 95 362 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும், கிறிஸ்தவ சமய தலைவர்களுக்காக 071 40 61 132 என தொலைபேசி இலக்கத்திற்கும், தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here