நாட்டை மாத்திரம் முடக்குவதால் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது

558

மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நாட்டை மாத்திரம் முடக்குவதால் கொவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணா்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இது வாழ்க்கையுடனான போராட்டமாகும். எனவே அனைவரும் தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் இருப்பார்களாயின் அருகிலுள்ள தடுப்பூசி நிலையங்களுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணா்டோபுள்ளே வலியுறுத்தியுள்ளார்.

தற்போது பயன்படுத்தப்படுகின்ற சகல தடுப்பூசிகளும் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற உதவும் என்று மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், டெல்டா திரிபானது மிகவும் வேகமாக பரவக் கூடியது எனவும் சகலரும் தாமாகவே தம்மை பாதுகாத்துக் கொள்வார்களாயின் இவ்வாறு வைரஸ் பரவக் கூடிய வாய்ப்புக்கள் இருக்காது எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணா்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here