ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஈலோன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தனை தெரிவித்துள்ளார்.
‘ட்விட்டரில் 5 சதவிதம் தவறான/ போலி கணக்குகள் உள்ளன. ஆகையால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஈலோன் மஸ்க் முன்வந்துள்ளதுடன், அதனை ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஏற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.