சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மூன்று மாதங்களுக்கு பின்னர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயற்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு CPC தொழில்நுட்ப ஊழியர்கள் பணியாற்றி வருவதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.