கலிபோனியாவில் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

361

கலிபோனியாவின் Lake Tahoe என்ற பகுதியில் பாரியளவில் காட்டுத் தீ பரவியுள்ளதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு வரையான காலப்பகுதியில், சுமார் 77 ஆயிரத்து 300 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த பகுதியில், கடந்த மாதம் முதல் தீப் பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அது பாரியளவில் பரவ ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தீ பரவல் ஏற்பட்டுள்ள பகுதியை அண்மித்து, சுமார் 22 ஆயிரம் குடியிருப்புகள் காணப்படுவதாகவும் தீயை அணைக்கும் நடவடிக்கையில், தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here