தனிமைபடுத்தல் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் – சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

1167

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைபடுத்தல் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் போதியளவு வீழ்ச்சி ஏற்படாத காரணத்தினால் முடக்கல் நிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 5,000 ஆக அடையாளம் காணப்பட்டாலும், சமூகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 50,000 பேர் வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here