30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் இன்னும் சில தினங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் பூரணமாக நிறைவு செய்ய முடியுமென இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டுமென கருத்துமுன்வைக்கப்பட்டுள்ளது எனவும் ஆரம்ப பிரிவுகளிலுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற தேவையில்லை. காரணம் சிறுவர்களுக்கு இவ்வைரஸ் தொற்று ஏற்படும் விதம் மிகவும் குறைவு என்பதாகும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எனவே இது தொடர்பில் சரியான தீர்மானம் ஒன்றை எடுத்து பரிந்துரையொன்றை முன்வைக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தவாரம் இக்குழுவின் பரிந்துரை கிடைத்தவுடன் எந்த வகுப்புக்களின் கல்வி செயல்பாடுகளை எப்போது ஆரம்பிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.