நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் கட்டம் கட்டமாக திறக்ககூடியதாக இருக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 4 வாரங்களாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் முதல் நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறந்து பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தடுப்பூசி வழங்கல் மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.