அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினாரென குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை தனது அமைச்சு பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலியிலிருந்து பணிப்புரை விடுத்துள்ளார்.
தொலைபேசியூடாக லொஹானை தொடர்புகொண்ட பிரதமர் இவ்வாறு பணித்துள்ளார்.
இதன்படி அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த பதவி விலகும் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானி சுதேவ ஹெட்டியாராச்சி உறுதிப்படுத்தினார்.