ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 21 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலின் போது, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய காரணத்தால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 21 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக 21 புதிய உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனை தடுக்கும் வகையில்,விளக்கப்பட்ட மேற்படி உள்ளூராட்சி உறுப்பினர்கள் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.